டெண்டர் எடுக்க வந்த ஒப்பந்ததாரர்கள்.. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்த திமுகவினர் : ரகளை செய்த வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 10:00 pm

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் சமயபுரம் வரக்கூடிய வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. சமயபுரம் பகுதிக்கு வரக்கூடிய 7 வழிகளிலும் டெண்டர் எடுத்தவர்கள் தங்களது ஆட்களை நியமித்து வரிவசூல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மூன்றாண்டுக்கு ஒருமுறை ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் மூலம் வாகனங்களுக்கு வரி வசூல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்ததாரர் ஸ்ரீரெங்கராஜ் என்பவர் வரிவசூலுக்காண டெண்டர் அளித்து அனுமதி பெற்றார். இதன் மூலம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பணம் கட்டி வந்தார்.

3 வருட டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரருக்கான டெண்டர் நேற்று நடைபெற்றது. ஒப்பந்தப்புள்ளி காண டெண்டர் திறப்பு, இன்று காலை கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரக்குமார் முன்னிலையில், பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

டெண்டர் திறப்பு நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில், ஒப்பந்தத்திற்கு சம்பந்தமில்லாத, சமயபுரம் திமுக நகர செயலாளர் துரை ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த டெண்டர் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது, சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் வாகன வரி வசூல் ஒப்பந்த புள்ளி டெண்டர் மாலை 3.30 மணி வரை நடைபெற்றதாகவும், ஒப்பந்ததாரர்கள் சிலர் இல்லாத நிலையில், பெட்டியினை சீல் வைத்து மூடாமல் வெறும் பூட்டு போட்டு பூட்டியுள்ளதால் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி சத்யநாராயணன் என்ற ஒப்பந்ததாரர் புகார் தெரிவித்தார்.

இதனால் அங்கிருந்த திமுகவினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்க முற்பட்டனர். இந்த சம்பவங்களை வீடியோ எடுத்த செய்தியாளர்களை, அங்கிருந்த, சமயபுரம் திமுக நகர செயலாளர் துரை ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் ஆகியோர், செய்தியாளர்களை செய்தி சேகரிக்கவிடாமல், வீடியோ எடுக்க கூடாதென மிரட்டி, வெளியேறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டெண்டரில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய பேரூராட்சி அலுவலகத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால், பாரபட்சமாக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரக்குமாரின் நடவடிக்கைகள் தெரிய வரும் எனவும், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை தடுத்து அவர்களை தாக்க வந்த திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்பந்ததாரர்களுடன், திமுகவினரால் ஏற்பட்ட வாக்குவாதம், சலசலப்பு காரணமாக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 804

    0

    0