உழவர்கள் சேற்றிற்குள்… முதல்வர் சிவப்பு கம்பளத்தின் மேல்.. நல்லா இருக்குங்க உங்க ஆய்வு… முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி..!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 6:25 pm

சென்னை : மயிலாடுதுறையில் விவசாயப் பணிகள் குறித்து சிவப்பு கம்பளத்தில் நின்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணியின் போது, வயல்வெளியில் கரைப்பகுதியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, அதன் மேல் நின்று விவசாயப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த செயல் எதிர்கட்சிகளிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதனை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் ஸ்டாலின் சிவப்பு கம்பள ஆய்வு குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். “ஸ்டாலின் – டெல்டா மாவட்ட ஆய்வு: உழவர்கள் சேற்றிற்குள், முதல்வர் சிவப்பு கம்பளத்தின் மேல்.! கள ஆய்வு பலமல்ல, பலகீனம்!,” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :- கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒரு வருடமாகிவிட்டது. தமிழகத்தில் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களையும் தலைமை செயலகத்தில் இருந்து பார்வையிடலாம்.

மயிலாடுதுறையில் நேரடி நெல்விதைப்பை நேரில் பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு போக வேண்டுமா..? நெல் விதைப்பை இவரே சென்று செய்ய வேண்டும். அதுதான். சிவப்பு கம்பளத்தில் நின்று நெல்லை வாங்கி வயலில் கூட போடாமல், ஏரியில் போட்டு விட்டு வருவதா நாகரீகம்.

உழவன் சேற்றில் நிற்கிறான். முதலமைச்சர் ஏரியில் சிவப்பு கம்பளத்தின் மீது நிற்கிறார். இது தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. இது நல்ல முறை அல்ல. முதலமைச்சர் ஆய்வுக்கு போகிறார் என்றால், அதில் முக்கியமான விஷயம் இருக்கும். திடீர் ஆய்வு எப்போதாவது செய்து, குறை கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டால் சரி.

இதே முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லையில் சட்டவிரோதமாக ஒரு கல்குவாரியில் 400 அடியில் கற்களை தோண்டி எடுத்த போது, 4 பேர் உயிரிழந்தனர். இப்பவும் அந்த மக்கள் நீதிக்காக போராடி வருகின்றனர். அதேபோல, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதையெல்லாம், முதலமைச்சர் ஆய்வு செய்து, இனி சட்டத்திற்கு புறம்பாக இனி ஒரு செங்கல்லையும் எடுத்து செல்லாமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1097

    0

    0