நீ ஆணா? பெண்ணா? மகளிர் அரசுப் பேருந்தில்தான் செல்வேன் என அடம் பிடித்த மாணவரிடம் ஓட்டுநர் வாக்குவாதம் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2022, 6:58 pm

கல்லூரிக்கு செல்ல நேரமாகிவிட்டது பெண்கள் பேருந்தில் தான் ஏறி பயணிப்போம் என கல்லூரி மாணவர்கள் பேருந்து ஓட்டுனர் நடத்துனரிடம் அடம்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதி கிராம மாணவர்கள் திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் படிப்பதற்காக அரசு பேருந்துகளில் ஏறி செல்வது வழக்கம்.

அவ்வாறு அரசுப் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக மாணவர்கள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டால் சிறப்பு பேருந்து இயக்குவது போக்குவரத்து கழகத்தின் சார்பாக பேருந்து இயக்கப்படும்.

சம்பவத்தன்று MSc., கணிதவியல் படிக்கும் மாணவன் பாலாஜி கல்லூரிக்கு வழக்கமான 8 மணிக்கு நேரத்தில் செல்லக்கூடிய பேருந்து அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிச் சென்றதால் ஏற முடியாத சூழ்நிலையால் வடப்புத்தூர் பாலாஜி என்கிற மாணவன் பெண்கள் செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். பாலாஜியுடன் நண்பர்கள் மூன்று பேர் பேருந்தில் ஏறி உள்ளனர்.

மாணவர்கள் பேருந்தில் ஏறியதும் சிறிது நேரத்தில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு பாலாஜி என்ற மாணவனை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. ஓட்டுனர் பாலாஜியை நீ ஆம்பளையா இல்ல பொம்பளையா என கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவனும் அரசு பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் எங்களுக்கு கூடுதல் பேருந்து இல்லை அதனால் தான் நாங்கள் இதில் வரவேண்டிய சூழ்நிலை. நாங்கள் இதில் தான் வருவோம் என அடம்பிடித்து உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மகளிர் பேருந்தில் ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்ததால் மாணவிகள் படியில் நின்று பயணம் செய்தனர், மாணவர்களும் தொங்கினால் பெண்களுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் மாணவர்களை இறக்கிவிட்டதாக தெரிவித்தனர்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 721

    0

    0