நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகுதா.? களமிறங்கிய இயக்குனர்.!

Author: Rajesh
5 June 2022, 7:33 pm

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்களது திருமணம் எப்போது என்று பல வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது வருகின்ற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்த நானும் ரவுடிதான் மற்றும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்திற்குப் பிறகு அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் தொடங்குவதற்கு முன்னதாகவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடக்க உள்ளது.

சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். மேலும் இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த திருமண விழாவை படமாக எடுத்து பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம். அதாவது கௌதம் வாசுதேவ் மேனன் தான் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஆவணப்படமாக எடுக்க உள்ளாராம்.

இதனை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வைபவத்தை ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 868

    0

    1