24 மணி நேரமும் நடந்த பயங்கரம்… முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி : தடல்புடலாக தமிழக அரசு எடுத்த முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 8:45 pm

கரூர் : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் எதிரொலி கரூர் எஸ்.பி அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து விற்பனையாகும் கஞ்சா, 24 மணி நேரமும் செயல்படும் மதுபானக்கடைகள், லாட்டரி சீட்டு விற்பனை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிமுக வினர் மீது திட்ட மிட்டே காவல்துறையினர் பொய் புகாரில் கைது செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போடாத ரோட்டிற்கு ரூ 3 கோடிக்கு மேல் செட்டில்மெண்ட் ஆன விவகாரம் அதை விஸ்வரூபமாக்கிய கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து புகைச்சலை ஏற்படுத்திய நிலையில் திமுக ஆட்சிக்கு ஒரு கரும்புள்ளி ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகமும், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரியும் நடந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த தார்சாலைகள் இரவோடு இரவாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டு அதுவும் காவல்துறையினரின் பாதுகாப்பில், புகார் அளிக்கப்பட்ட தார்சாலைகள் வேலைகள், ஜரூராக நடந்தது. அதுமட்டுமில்லாமல், தமிழக அளவில் அடுத்தவர் நிலத்தினை திமுக வினர் அபகரிக்கும் வீடியோ மற்றும் வீச்சரிவாள் கலாச்சாரங்கள் நட்ட நடு ரோட்டிலேயும், பிச்சுவாகத்தி, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் கரூர் மாவட்டத்தில் அதிகமாக அதிகரித்தும், கஞ்சா வியாபாரம் அதிகரிப்பின் காரணமாகவும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச்செயலாளரிடம் அளித்த புகார் மனு காரணமாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் ஏற்கனவே இருந்த எஸ்.பி சுந்தரவடிவேல் என்பவருக்கு பதிலாக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, புதிய கரூர் எஸ்.பி சுந்தரவதனன் கட்சி பிரமுகர்கள் என்று பாராமல், நடுநிலையாளையோடு செயல்படுவார் என்று எண்ணப்படுகின்றது.
இதுமட்டுமில்லாமல், கரூர் மாவட்ட ஆட்சியரும் ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி புகாரில் மாட்டியும் இதுவரை தலைமை செயலாளர் இறையண்பு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…