வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு… பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை.. காசியாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
6 June 2022, 8:47 pm

வாரணாசி : கடந்த 2006ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006ல் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் உள்ள ரயில்நிலையம், கோவில் உள்ள இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்பு காரணம் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான, பயங்கரவாதி முகம்மது வலியுல்லா கான் கைது செய்யப்பட்டான்.

இது தொடர்பான வழக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 4ம் தேதி நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகம்மது வலியுல்லா கான் குற்றவாளி என அறிவித்தது.

இந்த நிலையில், பயங்கரவாதி வலியுல்லாகானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்