பரீட்சை சரியாக எழுதாததால் விரக்தி; பிளஸ் 2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை…!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 4:53 pm

தேர்வு சரியாக எழுதாத காரணத்தினால் பிளஸ் 2 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வஉசி தெரு ஆட்டுமந்தை சந்து பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் பிரவீன் கார்த்திக் (வயது 17). இவர் அங்கு உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் ப்ளஸ்-டூ பரீட்சை எழுதினார். இதில் அவர் சரியாக தேர்வு எழுதவில்லை என்று தெரிகிறது.

எனவே, பிரவீன் கார்த்திக் கடந்த சில நாட்களாக மனப்பதட்டத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீன் கார்த்திக் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!