பெங்கரூளுவில் 2 வருடமாக மாறு வேடத்தில் இருந்த காஷ்மீர் தீவிரவாதி : ஆட்டோ ஓட்டுநராக நாடகமாடியவன் அதிரடி கைது… பரபரக்கும் பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 5:49 pm

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் பெங்களூரு வந்திருந்தனர். அப்போது பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஹுசைன் பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்ய உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து ஹூசைனை பெங்களூரு போலீசார் தேடி வந்தனர். அப்போது ஆட்டோ ஒட்டுநராக மாறுவேடத்தில் இருந்து ஹூசைனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2 வருடங்களாக மனைவியுடன் ஸ்ரீராமபுரா பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தை சேர்ந்த தாலிப் ஹூசைன். 2016ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்தவர். அந்த இயக்கத்துக்கு இளைஞர்களை சேர்க்கும் மூளைச் சலவை செய்யும் பணி ஹூசைனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

ஹூசைனைக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஒருவர் காஷ்மீரில் உள்ளார், மற்றொரு மனைவியுடன் பெங்களூரு ஸ்ரீராமபுரா பகுதியில் குடியிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார்.

கடந்த 2 வருடமாக பெங்களூருவில் ஹுசைன் தங்கியது ஏன்? சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? யாரெல்லாம் தொடர்பில் இருந்தார் என போலீசார் பல்வேறு கோணங்களில் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ஜம்மு காஷ்மீர் போலீசார் பெங்களூரில் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கர்நாடகா மாநில போலீசார் உதவி செய்துள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டங்களை போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!