உங்ககிட்ட iOS16 இருக்கா… அப்போ இனிமே இந்த புது ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
8 June 2022, 7:11 pm

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் புதிதாக ப்ரிவ்யூ செய்யப்பட்ட iOS 16 பயனர்கள் தங்கள் வைஃபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை பார்க்க அனுமதிக்கிறது.

iOS 16 டெவலப்பர் ப்ரிவ்யூவில் WiFi பாஸ்வேர்டை பார்ப்பதற்கும் அதை நகலெடுத்து நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு ஆப்ஷன் உள்ளது.
இந்த அம்சம் iOS 15 இல் கிடைக்கவில்லை.

பயனர்கள் அமைப்புகள் பிரிவில் வைஃபை பகுதியைத் திறந்து, பின்னர் அவர்கள் இணைக்கப்பட்ட நெட்வொர்க்கில் தட்டும்போது, ​​​​புதிய ‘பாஸ்வேர்ட்’ ஆப்ஷன் ஒன்று உள்ளது. அதைத் தட்டினால் அந்த வைஃபை நெட்வொர்க்கின் பாஸ்வேர்ட் அவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டை பார்க்க, பயனர்கள் ஃபேஸ் ஐடி, டச் ஐடி அல்லது PIN குறியீடு மூலம் அங்கீகரிக்க வேண்டும்.

பயனர்கள் வேறொருவருடன் தங்கள் பாஸ்வேர்டை பகிர நினைத்தாலோ அல்லது ஷேரிங் தானாகவே கிடைக்காத ஆப்பிள் அல்லாத சாதனத்துடன் இணைக்க விரும்பினாலோ இது எளிதான அம்சமாக இருக்கும்.

ஆப்பிள் சமீபத்திய iOS 16 ஐ, iPadOS 16, macOS வென்ச்சுரா மற்றும் வாட்ச்ஓஎஸ் 9 ஆகியவற்றுடன் ப்ரிவ்யூ செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த OS இன் பொது பீட்டாக்கள் ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் சோதனை இணையதளத்தில் கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 3171

    0

    0