இதுதான் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் நடக்கும் பிரமாண்ட செட்டா..? லீக்கான புகைப்படம் வைரல் …!!

Author: Babu Lakshmanan
9 June 2022, 9:44 am

நயன்தாரா திருமணத்திற்காக போடப்பட்டு உள்ள பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இருவரின் திருமணம் சென்னை – மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்து வருகிறது.

Nayanthara and Vignesh Shivan's mehendi ceremony: Inside details - Movies  News

இந்த திருமண விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. எனவே, இந்த விழாவில் கலந்துகொள்பவர்கள் செல்போன் கொண்டுவரவும், வீடியோ எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

Nayanthara-Vignesh Shivan's video wedding invite goes viral | The News  Minute

இருந்தபோதிலும், சில புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புகைப்படம் அடங்கிய தண்ணீர் பாட்டில்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இந்த தண்ணீர் பாட்டில்கள் திருமணத்திற்கு வருபவர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், இவர்களது திருமணத்திற்காக போடப்பட்டு உள்ள பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி கண்ணாடியால் ஆன பிரம்மாண்ட மணமேடை செட் ஒன்று கடற்கரை ஓரம் போடப்பட்டுள்ளது. அந்த செட்டின் புகைப்படம் தான் தற்போது லீக்காகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 998

    16

    6