சலூன் கடைக்கு சென்றவரை பின் தொடர்ந்த கும்பல் : கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2022, 10:01 pm

திண்டுக்கல் : சலூன் கடையில் முடி வெட்ட வந்த நபரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்து விட்டு இன்று மாலை வீடு திரும்பினார்.

வீட்டில் சலூன் கடைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு பேகம்பூர் பகுதியில் உள்ள பிரின்ஸ் சலூன் கடையில் முடி வெட்டுவதற்காக கடையின் உள்ளே நுழைந்தபோது அருண்குமாரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கூர்மையான கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் அருண்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அருண்குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த செயல் நடந்து உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • thalaivaasal vijay shared about his goals video viral as a meme டாக்டர் ஆகணும்னா கேட்டரிங் படிக்கணும்? மண்டையை பிச்சிக்க வைத்த தலைவாசல் விஜய்? 
  • Close menu