கோவை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்… TNPL இறுதிப் போட்டியை கண்டுகளிக்கத் தயாரா…?

Author: Babu Lakshmanan
10 June 2022, 8:51 am

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வருகின்ற 23ம் தேதி திருநெல்வேலியில் துவங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் ஜூலை மாதம் 10,11,12,13,15,16,29,31 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது பேசிய விளையாட்டு குழுவினர், இந்த ஆண்டிற்கான இறுதிப்போட்டி கோவையில் நடைபெறுவதாகவும், சென்னையை தாண்டி இதர மாவட்டங்களில் இறுதிப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை என்றும் கூறினார். மேலும், இந்தக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உட்பட பல்வேறு பிரபல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  • Sai Pallavi praised by Sandeep Reddy Vanga ஸ்லீவ்லெஸ்-க்கும் NO “சாய் பல்லவி தான் ரியல் ஹீரோயின்” –பிரபல இயக்குநர் வைரல் பேச்சு..!