தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் தீண்டாமை சுவர்… பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அகற்ற சம்மதம்…!!

Author: Babu Lakshmanan
10 June 2022, 10:09 am

தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் உள்ள தீண்டாமை சுவரை இடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டியது.

திருவள்ளூர் மாவட்டம் தோக்கமூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மக்களிடம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், குடியிருப்புகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவர் அகற்றபடவேண்டும், அரசு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, வேலி அமைக்க கூடாது என கோட்டாட்சியர் காயத்ரி தெரிவித்ததை தொடர்ந்து, இரு தரப்பும் ஏற்று பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டியது.

விரைவில் தீண்டாமை சுவரை இடிக்கும் பணிகள் வருவாய்த்துறை மூலம் நடைபெறும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தீண்டாமை சுவர் மற்றும் வேலி தற்காலிகமாக அமைக்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி பட்டியலின மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது பிரச்சினை கோட்டாட்சியரின் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 626

    0

    0