பொத்தி பொத்தி கூப்பிட்டு போறாரு… கலாய்த்த பத்திரிகையாளர் : புன்னகைத்த நயன்தாரா.. திருப்பதியில் சுவாரஸ்யம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2022, 5:26 pm

திருப்பதி : ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக சிவன்,நயன் தம்பதி திருமலை வருகை புரிந்த சம்பவத்தை அறிந்த ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி மலையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் சுபதம் நுழைவு வாயில் வழியாக கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.

பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

இது நிலையில் திருமணத்திற்கு முன் இரண்டு முறை திருப்பதி மலைக்கு வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று ஏழுமலையானின் கல்யாணம் உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மீண்டும் திருப்பதி மலைக்கு வந்தனர்.

ஏழுமலையான் கோவில் முன் இருக்கும் விஐபி மற்றும் செலிபரிட்டீஸ் கார் பார்க்கிங் பகுதிக்கு காரில் வந்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் அவர்கள் வேறு ஒரு வழியில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு சமீபமாக வந்து அங்கிருந்து கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ள கோவிலுக்குள் சென்றனர்.

  • Shobana அந்த சத்தம்.. அம்மாவுக்கு டீ.. அடங்காத உயிர்.. ஷோபனாவின் கண்கலங்க வைக்கும் இறுதி நிமிடம்!