சிக்கலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்? காலணியுடன் போடோஷூட் நடத்திய சர்ச்சை : தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2022, 8:47 pm

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் இதுவரை யாரும் செய்யாத வகையில் போஸ்ட் வெடிங் ஷூட் நடத்திய நயன்தரா விக்னேஷ் சிவன் தம்பதி காலணி அணிந்து நடத்தியதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மலையில் சினிமா, சீரியல் ஆகியவற்றுக்கான படப்பிடிப்புகளை நடத்துவது, திறந்த வெளியில் வெட்டிங் சூட் நடத்துவது ஆகியவை போன்ற செயல்களுக்கு அனுமதி கிடையாது.

ஆனால் நேற்று திருமணம் ஆகி இன்று திருப்பதி மலைக்கு வந்த நயன்தாரா,விக்னேஷ் சிவன் தம்பதி இதுவரை யாரும் செய்யாத வகையில் முதன்முதலாக ஏழுமலையான் கோவில் முன் போஸ்ட் வெட்டிங் சூட் நடத்தி மகிழ்ந்தனர்.

ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணிகளுடன் நடமாட யாருக்கும் அனுமதி கிடையாது.

ஆனால் காலணிகளுடன் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதியான ஏழுமலையான் கோவில் முன்பகுதியில் நயன்தாரா காலணியுடன் சென்று போஸ்ட் வெட்டிங் ஷூட்டில் கலந்து கொண்டார்.

ஏழுமலையான் கோவில் முன் நயன், சிவன் தம்பதி போஸ்ட் வெட்டிங் சூட் நடத்தியது, அதில் காலணியுடன் கலந்து கொண்டது பக்தர்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து அறிந்த தேவஸ்தானம், விசாணையை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கதவல் வெளியாகியுள்ளது. இதனால் புதுமணத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?