ராஜினாமா செய்துவிட்டு சனாதானத்தை பற்றி பேசுங்க… ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan12 June 2022, 12:46 pm
தமிழக ஆளுநர் பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு சனாதனம் பற்றி பேசலாம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே நமது சனாதன தர்மம் கூறுகிறது என்ற தமிழக ஆளுநர் ஆர் என்.ரவியின் கருத்தை திரும்பப் பெற வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்,.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு பேரணியை தூக்கி வைத்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முத்தரசன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தமிழக ஆளுநர் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புகளால் அவர் உருவாக்கப்பட்டவர் என்று எங்களுக்கு தெரியும் மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருப்பதால் இங்கு எது வேண்டுமானாலும் பேசலாம் என்று தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சனாதனத்தை பற்றி பேச வேண்டும் என்றால் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி உள்ளிட்ட சனாதன கருத்துக்களை அவர் பேசலாம்
இப்படி ஒரு கருத்தை அவர் வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையில் 21 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக கையெழுத்து போடாமல் காத்திருக்கிறது.
தமிழக முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியும் அதையெல்லாம் விட்டுவிட்டு சனாதானத்திற்கு ஆதரவாக பேசுவது மட்டுமல்ல கடுமையான கண்டனத்துக்குரியது வேற்றுமையில் ஒற்றுமை என்பதே குறிப்பிடுகிறார். கருத்தை உடனே தமிழக ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்,