தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு? நிலக்கரி கையிருப்பு குறைந்தது : அமைச்சர் செந்தில்பாலாஜி அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 2:16 pm

தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது என்றும், இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறுகையில்: “தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்கு உள்ளது.

எனினும்,137 டாலருக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி என்பது நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு முன்னதாகவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வாரியத்தின் மூலமாக இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு அவை இரு நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு தமிழகத்திற்கு நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது.

ஆனால்,வேறு எந்த மாநிலங்களும் குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ததாக செய்திகள் வெளிவந்ததாக எனக்கு தெரியவில்லை.தமிழகத்தில் மின்தேவை அதிகரித்துள்ளது.எனினும்,இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 528

    0

    0