அவருக்கு அது பண்ணவே தெரியாது.. கணவர் குறித்து இப்படியா பேசுவீங்க குஷ்பு மேடம்.!

Author: Rajesh
12 June 2022, 2:36 pm

1995 ஆம் ஆண்டு நடிகர் ஜெயராமன் நடிப்பில் வெளியான படம் முறைமாமன். இந்த படத்தில் ஜெயராமனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்திருந்தார். மேலும் கவுண்டமணி, மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்

இந்த படத்திற்கு பிறகு தான் சுந்தர்.சிக்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழுந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

குஷ்பு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார், இந்த நிலையில் சுந்தர்.சிக்கும் தனக்கும் இடையே இருக்கும் அந்த நல்ல உறவை பற்றிய ரகசியத்தை சமீபத்தில் கூறினார். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தாலும் சுந்தர்.சிக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியாது.

அதுவும் ரொமான்ஸ் என்ற வார்த்தையின் முதல் எழுத்து ஆர் என்பது கூட தெரியாது. வெளில எங்கேயாவது போகலாம் என்று சொன்னால் கூட வருவதற்கு மிகவும் யோசிப்பார். குஷ்புவிற்கு ரொமான்ஸ் பண்ணுவதற்கென்றே நிறைய இடங்கள் இருக்கும். அங்கு போக ஆசையாய் கூறுவாராம். ஆனால் சுந்தர்.சி வீட்லயே இருந்து விடலாம் என்று கூறுவாராம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் குஷ்பு கூறினார்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!