இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை : கோவையில் இருந்து சீரடிக்கு போக ரெடியா? தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 June 2022, 4:38 pm
மத்திய அரசின் பாரத் கௌரவ் திட்டம் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. இதை ஒட்டி போத்தனூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் பீ ஜி மல்யா சேலம் கோட்ட drm கவுதம் சீனிவாசன் ஆய்வு நடத்தினார்.
கோவையிலிருந்து சீரடிக்கு வாராந்திர ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரயில் மந்திராலயத்தில் நின்று பிறகு சீரடி செல்லும் ஐந்து நாட்கள் கொண்ட ரயில் பயணமாக அமைய உள்ளது.
அதிகபட்சமாக 12,999 ரூபாயும் குறைந்தபட்சமாக 2500 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14ம் தேதி துவங்க பட ரயிலை போத்தனூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் பீ ஜி மல்யா, சேலம் கோட்ட பிஆர்எம் கௌதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ரயிலில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தனியார் வசம் கொடுக்கப்படும் ரயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.