எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நாங்கதான் மக்களுக்காக பாடுபடும் சிறந்த எதிர்க்கட்சி : கோதாவில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 7:43 pm

திருப்பூர் அருகே பெரிய குரும்பபாளையத்தில் இந்திரன்கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது பாமகவின் மாநிலத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட பெரியகுரும்ப பாளையம் பகுதியில் தேவேந்திரர் குல வேளாளர் சமூகம் சார்பில் இந்திரன் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது .

இதில் பாமக வின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் . முன்னதாக மாநில தலைவராக பொறுப்பேற்று திருப்பூர் மாநகர மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தரும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸுக்கு திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் அவிநாசி சேவூர் சந்திப்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பேரணியாக பெரிய குரும்பாபாளையம் பகுதிக்கு வந்த அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தேவேந்திர வேளாளர் சமூகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய பாமகவின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்காக பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே கொடுத்திருப்பதாகவும் இன்னும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் இம்மானுவேல் சேகரனார் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கட்சி தொடங்கும் முன்பாகவே தீர்மானம் நிறைவேற்றியவர் ராமதாஸ் எனவும் தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் சாதி கண்ணோட்டம் அல்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக அனைத்து அமைப்புகளும் ஒன்றினையும் பட்சத்தில் வளர்ச்சி உருவாகும் எனவும் அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க தயாராக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் அரசியலுக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்சிக்காக அனைவரின் உழைப்பும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் அரசியல் காரணங்களுக்காக சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் ஆனால் பாமக அனைவரின் ஒன்றிணைப்பை மட்டும் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அதன் மூலம் சமூக வளர்ச்சி அடைய முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலனுக்காக ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் மாநில பொருளாளர் திலகபாமா மாவட்ட செயலாளர் ரமேஷ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி மன்சூர் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 950

    0

    0