‘வெறும் 3 பேரை வைத்து 15 நாளா பழுது பாக்கறாங்க’ : காட்பாடி ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த அதிமுக பிரமுகர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 9:56 pm

வேலூர் : காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 25 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்டது. வேலூர் மாவட்டத்தையும் ஆந்திர மாநிலத்தையும் இணைத்து வருவாயை ஈட்டித்தரும் பாலமாக விளங்கி வருகிறது.

இந்தப் பாலத்தை பழுது பார்க்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. துவங்கிய நாள் முதல் பாலத்தை பழுதுபார்க்கும் பணியில் 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.

இதனையடுத்து இன்று அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு சுமார் 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து எஸ்ஆர்கே எப்போது கூறுகையில் ரெயில்வே மேம்பாலம் மராமத்து பணி தொய்வாக நடப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள், 108 ஆம்புலன்சு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகப்படியான பணியாட்களை பணியமர்த்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார்.

  • Pushpa 2 HD Release புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!
  • Views: - 890

    0

    0