கேரளாவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்.!

Author: Rajesh
14 June 2022, 4:00 pm

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் மிக விமரிசையாக நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த மறுநாளே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இந்த ஜோடி நயன்தாராவின் சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு மறுவீடு சென்றுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகின.

இந்நிலையில் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu