எம்ஜிஎம் மதுபான ஆலையில் ரெய்டு : 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2022, 12:59 pm
விழுப்புரம் : எல்லிஸ்சத்திரம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் மதுபான ஆலையில் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரில் தமிழ்நாடு மற்றும் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 இடங்களில் எம்.ஜி.எம் குடும்பத்திற்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான மதுபான ஆலையில் பிராந்தி தயாரிக்கும் மதுபான ஆலையில் இன்று காலை 8.30 மணி முதல் 15 பேர் கொண்ட வருமானவரித் துறையினர், நான்கு காரில் வந்து சோதனையை செய்து வருகின்றனர் அந்த சோதனையானது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருகின்றன