மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கலைஞர் 100 ஆண்டு நினைவு நூலகம் அமையும் : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நம்பிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 9:44 pm

மதுரையில் 85 நூலகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டி தேர்வுக்காண கருவி புத்தகம் வழங்கப்படும் என மதுரை எம்பி தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு..வெங்கடேசன் மதுரையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழ் நாடு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம், உரிய பயிற்சி கிடைப்பதில்லை,
அதற்கு தீர்வு காணும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பில் மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் 164 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை நூலகங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதனை நாளை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக புத்தகங்களை வழங்க உள்ளார். போட்டி தேர்வர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். கிராமப்புற நூலகங்களில் இடவசதி என்பது சவாலாக உள்ளது.

மாநகராட்சி வளாகங்களில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கலைஞர் 100 ஆண்டு நினைவு நூலகம் அமையும். தனியார் பயிற்சி மையங்களில் கிடைக்கும் கருவி நூல்கள் சுயமாக படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் துவங்க படுகிறது என்று பேசினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 671

    0

    0