அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு… பூதாகரமான வன்முறை : பீகாரில் பல மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2022, 9:16 pm

அக்னிபாத் வன்முறையை தொடர்ந்து, பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான குறைந்தபட்சம் 17.5 அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 721

    0

    0