டயர் வெடித்து பலமுறை பல்டி அடித்த கார்… 5 பேர் காயம் : நெஞ்சை உலுக்க வைத்த சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 7:11 pm

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்த நிலையில் நெஞ்சை பதற வைக்கும் சிசிடி காட்சி வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் வேலூரில் தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் புகைப்படக்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு காரில் தனது மனைவி சோனியா மற்றும் குழந்தைகள் அனுசியா (வயது 12),ஹேமா பிரபா (வயது 8) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்துள்ளார். காரை டிரைவர் பிரபு ஓட்டி வந்துள்ளார்.

கார் மதுரை – திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் உள்ள போக்குவரத்து நகர் அருகே வந்த பொழுது காரின் இடது முன்பக்க டயர் வெடித்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. காரில் பயணம் செய்த மோகன் அவரது மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மற்றொரு குழந்தையான அனுசியா கை முறிவு ஏற்பட்டது. டிரைவர் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக அம்பாத்துரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?