திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் : தன்னைத் தானே பாட்டிலால் குத்தியதால் பரபரப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan19 June 2022, 8:47 pm
திருப்பதி : ஏழுமலையான் கோவில் சமீபத்தில் பாட்டிலால் தன்னைத் தானே குத்தி கொண்டு கர்நாடக வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கண்ணாடி பாட்டிலால் தன்னுடைய வயிற்று தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவை சேர்ந்த சாய்குமார் என்பவர் இன்று மாலை ஏழுமலையான் கோவில் சமீபத்தில் இருக்கும் திருமலைநம்பி கோவில் அருகே கண்ணாடி பாட்டிலால் தன்னுடைய வயிற்றில் தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கவனித்த அங்கிருந்த பக்தர்கள் செய்வது அறியாது திகைத்து அச்சத்தில் உறைந்து போயினர். பக்தர்கள் எழுப்பிய கூக்குரலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த சாய்குமாரை மீட்டு திருப்பதி மலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை திருப்பதி உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள திருமலை போலீசார் சாய்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றிய விசாரணை நடத்துகின்றனர்.