அவர ஏன் இதுல இழுத்து விட்ட..? பாடகியை பந்தாடிய பயில்வான் ரங்கநாதன்!.
Author: Rajesh20 June 2022, 2:20 pm
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகைகளின் அந்தரங்க யூடியூப் சேனல்கள் மூலம் அவிழ்த்து விட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவருக்கும் தயாரிப்பாளர் கே. ராஜனுக்கும் மிகப்பெரிய மோதலே ஏற்பட்டது. அதன் பின்னர் கே. ராஜன் பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து பாடகி சுசித்ரா பற்றி பயில்வான் அவதூறு கருத்து வெளியிட்டதாக பாடகி சுசித்ராவும் கமிஷனர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் ஒன்றை பதிவு செய்தார்.
அந்த புகாரில் 2017ம் ஆண்டு வெளியான சுச்சி லீக்ஸ் காரணமாக தனது வேலையே போயிடுச்சு என்றும் அதற்கு காரணம் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு எனக் குறிப்பிட்டு இருந்ததாகவும், தற்போது பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி இப்படி பேசக் காரணமே அவருக்கு பின்னால் இந்த மூவரும் இருப்பதாக சந்தேகிக்கிறேன் என புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், நடிகர்களின் அந்தரங்கங்களை வெளியிட்டதே சுசித்ரா தான் அதுதொடர்பான வழக்கே இன்னும் நிலுவையில் இருக்கு, அவரது கணவர் கார்த்திக் குமார் தான் மனநலம் சரியில்லை என ஜாமின் எடுத்தார் என்றும் இப்போ என் மீது புகார் கொடுத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் சுசித்ரா என்றும் பயில்வான் ரங்கநாதன் விளாசி உள்ளார்.
மேலும், நடிகர் தனுஷ் எனக்கு காசு கொடுக்கிறாரா? அந்த அளவுக்கு நான் என்ன பெரிய ஆளா எனக் கேட்ட பயில்வான் ரங்கநாதன் இந்த பிரச்சனையில் அவரையும் இழுத்து விட்டு பெரிய சிக்கலில் மாட்ட உள்ளார் சுசித்ரா என பந்தாடி இருக்கிறார்.