சமந்தா உடன் விவாகரத்துக்கு பிறகு மீண்டும் காதலில் விழுந்த நாக சைதன்யா.? பரபரக்கும் Tollywood .!

Author: Rajesh
20 June 2022, 6:07 pm

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யா, சமந்தா நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ஒரு வருடத்திற்கு முன்பு தங்கள் விவகாரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் படங்களின் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனது முன்னாள் மனைவியை பிரிந்து ஒரு வருடம் கழித்து நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்பதாகவும் அங்கு இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் ஒட்டலில் பலமுறை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது தெலுங்கு வட்டாரத்தில் இந்த செய்தி சென்சேஷன்ல் ஆக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்திகள் குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?