என்ன ஐயர்ன்னு கூப்பிடாதீங்க.. பெயரில் திருத்தம் செய்த பிரபல நடிகை.!
Author: Rajesh21 June 2022, 2:12 pm
தமிழில் திரு திரு துரு துரு மற்றும் விண்னைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜனனி அய்யர், தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தெகிடி படத்திற்கு பிறகு அசோக் செல்வனுடன் இவர் நடித்துள்ள வேழம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நாயகன் அசோக் செல்வனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் இதில் பங்கேற்காத நிலையில். ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன், மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர்கள என பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனனி ஐயர் கூறுகையில், தெகிடி வேழம் என தலைப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. நல்ல திரைப்படங்களை ஆதரிக்க தமிழ் சினிமாவில் ஆட்கள் குறைவாக உள்ளனர். அப்படிப்பட்ட வேழம் படத்தை வெளியிட எஸ்பி சினிமா சார்பில் கிஷோர் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறிய அவர், திடீரென தனது பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இனிமேல் அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். பாலாவின் அவன் இவன் படம் வெளியான போது ஜனனி ஐயர் பெயரில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்துதற்போது ஜனனி ஐயர் என்ற பெயரில் இருந்த சமூகத்தின் வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.