அக்னிபாத் திட்டம் குறித்து திட்டமிட்டு போராட்டம் தூண்டப்படுவதற்கு இவங்க தான் காரணம்? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 7:47 pm

புதுச்சேரி : அக்னிபத் திட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் தூண்டப்படுகிறது என்றும் எதிர்வரும் பாராளுமன்ற புதுச்சேரியில் பாஜக போட்டியிட தயாராகி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தேசத்திற்கான சேவை செய்ய சிறந்த பாதையாக அக்னிபத் திட்டம் உள்ளது என்றும் இதன் மூலம் இராணுவத்திற்கு திறமை மிக்க வீரர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் அக்னிபாத் திட்டம் பல நாடுகளில் உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இளைஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் திட்டம் உள்ளது என்றார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் தூண்டப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளது என்றும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் எதையும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும் பாஜக ஆட்சியில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் வைத்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்தது என்றார்.

நாடுமுழுவதும் சென்னை காசிமேடு, கொச்சி உட்பட 5 துறை முகங்கள் தேர்வு செய்யப்பட்டு
சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோல் புதுச்சேரி அதி வேக வளர்ச்சி அடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்த அவர் ஒற்றை தலைமை அதிமுக உட்கட்சி விவகாரம் பதில் அளிக்க முடியாது என்றும் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக போட்டியிட தயாராகி வருகிறது என்றார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!