அடியாத மாடு படியாது என்ற பழமொழிக்கு ஏற்ப நடந்த சுவாரஸ்ய சம்பவம் : மாஸ்டர் பட விஜய் பாணியில் களத்தில் இறங்கிய பள்ளி தலைமையாசிரியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 6:09 pm

விழுப்புரம் : பெற்றோர்கள், ஆசிரியர்கள் அறிவுரை சொல்லியும் கேட்காத மாணவர்களை நல்வழிப்படுத்த அதிரடியாக கத்திரிக்கோல் தேங்காய் எண்ணையுடன் தானே களத்தில் இறங்கிய அரசு பள்ளி தலைமையாசிரியர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு பள்ளியில் சுமார் 1126-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் பல்வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தனர்.

இதனால் அந்த பள்ளியின் மாணவர்கள் நலன் சீர் கெட்டுப் போயிருந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்றதிலிருந்து மாணவர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல ஒரு போராட்டமே நடத்தி இருக்கிறார். இதற்காக 10 தடவைக்கு மேல் பெற்றோர்களை சந்தித்து சந்திப்பு கூட்டமும் நடத்தியிருக்கிறார்.

ஆனால் எந்தவித பயனும் ஏற்படாத நிலையில் பெற்றோர்கள் ஒத்துழைப்பு மற்றும் காவல் துறையின் உதவியோடு தானே களமிறங்கி மாணவர்களிடையே சீர்திருத்தங்களை கொண்டுவர தலைமையாசிரியர் சந்திரகுமார் பள்ளிக்கு வரும் மாணவர்கள் நகங்களை ஒழுங்காக வெட்டிருக்கிறார்களா? சீருடைகள் சுத்தமாக அணிந்து கொண்டு வருவார்களா? மேலும் முடி வெட்டிக் கொண்டு வருகிறார்களா? என்று கவனத்துடன் பார்த்து முடி வெட்டாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கத்தரிக்கோல் சீப்புடன் முடிகளை வெட்டி அவர்களுக்கு தேங்காய் எண்ணை தடவி வகுப்புக்கு உள்ளே அனுமதிக்கிறார்.

இது வாரா வாரம் அவரவரின் முக்கிய பணியாக இருந்து வருகிறது. மேலும் மாணவர்களில் சூழ்நிலை கருதி போலீசார் பாதுகாப்புடன் இந்த செயலை தலைமையாசிரியர் செய்து வருகிறார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து மனம் நெகிழ பேட்டியளித்த அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல்வேறு போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்த அரசு பள்ளி மாணவர்கள் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு நல்ல வழிக்குத் திரும்பி இருக்கிறார்கள்.

இந்த பள்ளியில் உள்ள 1126 மாணவர்களில் சுமார் 99 சதவீத மாணவர்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர்களை நல்வழிப்படுத்துவது இறைவன் தமக்கு அளித்த ஒரு வரம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 743

    0

    0