பதவியே இல்ல.. அப்பறம் எதுக்கு படம்? ஓபிஎஸ் படம் மற்றும் பெயர்களை அழித்த அதிமுகவினர் : விழுப்புரம் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2022, 4:14 pm

விழுப்புரம் : அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் தெரிவித்த நிலையில் ஓபிஎஸ் படம் மற்றும் அவரது பெயர் அழிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று செய்யப்பட்ட சட்ட திருத்தங்களுக்கு, நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் அனுமதி பெறாததால், பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும், அதாவது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சி பதாகைகள் மற்றும் அப்பகுதியில் சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் மற்றும் அவரது பெயரை, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெள்ளையடித்து, இன்று அழித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்த நேற்றைய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு கொடுத்துள்ள நிலையில், விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் மற்றும் அவரது பெயரை அழித்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தலைமை நிலைய செயலாளராக இபிஎஸ் செயல்டுபவார் என்றும், ஓபிஎஸ் பொருளாளர் மட்டுமே என சிவி சண்முகம் இன்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 512

    0

    0