சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் விழுந்து வங்கி மேலாளர் பலி : மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டிய பள்ளத்தால் விபரீதம்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2022, 9:21 pm

சென்னை : கே.கே நகரில் கார் மீது மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் கே.கே நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது வங்கியில் வேலை பார்க்கக் கூடிய வாணி கபிலன் என்பவரும், அவரது தங்கை எழிலரசி என்பவரும் காரில் சென்றுள்ளனர். கார்த்திக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று சாலை ஓரம் இருந்த மரம் காரின் பின் பக்கமாக சாய்ந்து விழுந்தது. இதில் காரின் பின் இருக்கையில் இருந்த வாணி கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எழிலரசி மற்றும் கார் ஓட்டுனர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!