நகைக்காக தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை… உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
25 June 2022, 9:59 am

புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியில் உண்ணாமலை (75) என்ற மூதாட்டி தனியே வசித்து வந்தார். செல்வந்தரான மூதாட்டி உண்ணமாலை கணவனை இழந்த நிலையில், தனியே வசித்து வந்தார். வழக்கமாக வெளியே வந்து செல்லும் மூதாட்டி நேற்று இரவு முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் இரவு வீட்டில் சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மூதாட்டி வீட்டில் வைத்து இருந்த நகைகள் காணாமல் போனதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தகவல் தெரியும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ