எங்ககிட்ட பாஜக ஏன் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை… இதுதான் ஜனநாயகமா? அமைச்சர் துரைமுருகன் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 11:29 am

வேலூர் : மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு சட்டவிரோதமானது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளம் கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினர் அனைக்கட்டு நந்தகுமார் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றிற்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது.

நான் சட்டமன்ற உறுப்பினராக இத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடமில்லை. அப்படிதான் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுபயணம் செய்த போது ராணி எலிசபெத் மது விருந்து கொடுத்தார்கள். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன். இதுவரை மது அருந்தியதே கிடையாது என்று பேசினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நதிநீர் ஆணையத்தில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும் பின்னனியில் உள்ளது போலும் உள்ளது. கர்நாடக அரசு சொல்லுவதும் தவறு காவிரி மேலாண்மை ஆணையம் சொல்லுவதும் தவறு உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அதிகாரங்களை சொல்லியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் வாங்காமல் எதையும் செய்வது நியாயமில்லை. சட்டவிரோதம் உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது சுற்றுசூழல்துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சென்னையில் வடிகால்களை மேம்படுத்த உள்ளாட்சித்துறை நீர்வளத்துறை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அதில் உரிய பணம் ஒதுக்கி பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

பணிகள் மழைகாலத்திற்குள் முடியும் தமிழக முதல்வர் 28 ஆம் தேதி ஆம்பூர் வந்து திருப்பத்தூர் விழாக்களில் பங்கேற்கிறார். பின்னர் வேலூர் புதிய பேருந்து நிலையம் திறக்கிறார். பின்னர் நலத்திட்டங்களை வழங்குகிறார். மறுநாள் ராணிப்பேட்டையில் விழாக்களை முடித்துவிட்டு சென்னை செல்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் நிலைபாடு நாங்கள் முடிவு செய்து யஷ்வந்த் சிங்காவை வேட்பாளராக ஆதரிக்கிறோம். சமூக நீதியில் திமுக ஈடுபாடு உள்ளவர்கள் ஆனால் பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு நாங்கள் தான் பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி ஆனால் எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை என்று கூறினார்.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!
  • Close menu