இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா : இங்கிலாந்தில் அடுத்தடுத்து வீரர்களுக்கு அதிர்ச்சி… டெஸ்ட்டில் களமிறங்குவது சந்தேகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 5:01 pm

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பயிற்சி போட்டியில் பங்கேற்றிருந்த ரோகித் சர்மா, 3வது நாளான நேற்று பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவே இல்லை. இந்திய அணி 364/7 ரன்களுக்கு சென்ற போதும், ரோகித் வரவில்லை.

போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட போது, பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறைந்தபட்சம் அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜூலை 1 நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியையும் தவறவிடலாம்.

இந்திய அணியில் ஏற்கனவே கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகிவிட்டார். தற்போது கேப்டன் ரோகித் சர்மாவும் விலகுவது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இங்கிலாந்துடனான முந்தைய 4 போட்டிகளிலும் ரோகித் சர்மா தான் இந்தியாவின் அதிக ரன் ஸ்கோரர். 4 போட்டிகளில் 368 ரன்களை அடித்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பயோ பபுள் விதிமுறைகள் பின்பற்றப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோகித் சர்மா, கோலி உள்ளிட்ட பல வீரர்களும் இங்கிலாந்து நகரங்களில் ஜாலியாக சுற்றி வந்தனர். எனவே இதுதான் ரோகித்திற்கு தொற்று பரவ காரணமா என சந்தேகம் கிளம்பியுள்ளது. ஏற்கனவே விராட் கோலிக்கும் கொரோனா உறுதியானதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 2230

    0

    0