கிராம மக்களுக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்… 15 பேர் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 8:32 pm

திண்டுக்கல் அருகே திமுக கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் காமணன் என்பவர் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 15 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பெயரைக் கூறி திமுக கட்சி அலுவலகத்தில் திமுக பிரமுகர் காமணன் வேலை பார்த்து வருகிறார்.

இவர், பெரியகோட்டை பஞ்சாயத்து வன்னிய பாறைப்பட்டியில் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பம் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர விடாமல் தடுப்பதாகவும், இதனை காவல் நிலையத்திற்கு, கோர்ட்டிற்க்கும் கொண்டு சென்றால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், வன்னிய பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!