அக்னிபாதை திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு தீவிரம் : 4 நாட்களில் 94 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம்!!
Author: Babu Lakshmanan28 June 2022, 9:56 am
அக்னிபாதை திட்டத்தில் இணைந்து பணியாற்ற 4 நாட்களில் 94 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அக்னிபாதை என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதாவது, 17.5 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு பீகார், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ரயில்களுக்கு தீவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
இதனிடையே, கடந்த 24ம் தேதி முதல் ராணுவம், விமானப்படை, கடற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள்தேர்வு நடைபெறுகிறது. விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் இந்தப் பணிக்கு, விண்ணப்பிக்க ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும். நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்தார்.