காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் விரக்தி.. விஷம் அருந்தி விட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு : உடனே நடந்த அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 4:11 pm

கோவை : புகாரின் மீது காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சானி பவுடர் குடித்து விட்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்ப்பு நாளன்று அலுவலக வளாகத்தில் உடல்நிலை குன்றிய நிலையில் ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் அது குறித்துக் கேட்டபொழுது தான் சானிபவுடர் குடித்துள்ளதாக கூறினார்.

உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு மருத்துவ சிகிச்சை அளித்த பிறகு அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் இருகூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 40) என்பதும், தான் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பொழுது முறையாக புகார் குறித்து கேட்காமலும் விசாரிக்காமலும் தன்னை அலட்சியப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து புகாரை முறையாக விசாரிக்காமல் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பெயரில் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
  • Close menu