சாதி மோதலை தூண்டுவதாக திமுகவின் தங்கத்தமிழ்செல்வனுக்கு எதிர்ப்பு : ஊர் முழுவதும் கண்டன போஸ்டர் ஒட்டியதால் கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 12:45 pm

தேனி : திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வனை கண்டித்து கிராம மக்கள் கண்டன போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம் பேரூராட்சி. இங்கு ஒரு சமுதாயத்தினர் 80 சதவீதம் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டு காலமாக இவர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

80 சதவீத மக்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் திமுகவின் கோட்டையாக மீனாட்சிபுரம் பேரூராட்சி இருக்கிறது. இதில் பேபி குருசாமி என்பவர் கடந்த 20 ஆண்டு காலமாக பேரூர் கழகச் செயலாளராக இருந்து வருகிறார்.

தற்போது இவருக்கு எதிராக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் 20% வாக்கு வங்கி வைத்துள்ள வேறொரு நபருக்கு பரிந்துரை செய்ததால் சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து சமுதாய கூட்டம் கூட்டி தங்க தமிழ்ச்சவனுக்கு சமுதாய ரீதியான பிரச்சனை உருவாக்க முயற்சிப்பதாக கூறி கண்டன தீர்மானம் நிறைவேற்றினர்.

அதைத்தொடர்ந்து தங்களது கண்டனத்தை மேலும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தேனி போடி சுற்றுப் பகுதிகளில் முக்கிய இடங்களில் கண்டன போஸ்டர்களையும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சில இடங்களில் தங்கதமிழ்செல்வன் ஆதரவாளர்கள் போஸ்டர்களை கிழித்து எதிர்ப்பாளர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் மீனாட்சிபுரம் மற்றும் போடி பகுதிகளில் திமுகவினரிடையை கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 815

    0

    0