6 மாதங்களுக்குப் பிறகு ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு

Author: Babu Lakshmanan
1 July 2022, 10:57 am

கோவை : ஆழியார் கவியருவியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கவியருவி. இங்கு விடுமுறை மற்றும் அனைத்து நாட்களிலும் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து கவி அருவியில் குளிப்பது வழக்கம்.

அந்த வகையில், கடந்த ஆறு மாதமாக சரியாக நீர்வரத்து இல்லாததால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிக்க தடை விதித்து வந்தனர். தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால், இன்று அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைந்த உடன் நீர்வரத்து பொறுத்து சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்கப்படும், என வனத்துறையினர் தெரிவித்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி