இவ்ளோ பெரிய ஜீப்பும் கண்ணுக்கு தெரியலயா? வேலூர் மாநகராட்சி லட்சணம் : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கான்டிராக்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 4:42 pm

வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலரை அப்புறப்படுத்தாமலேயே ஓரிரு நாள்களுக்கு முன்பு சிமெண்ட் ரோடு போட்டிருந்தனர்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, அதே வேலூரில் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போடப்பட்டிருக்கிறது.

அப்பகுதி மக்கள் புகாரிக்களிக்கவே, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார். அதையடுத்து, சாலை சீர் செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமல் சாலை போட்டிருப்பது அதிகாரிகளின் அலட்சியப் போக்கை பிரதிபலித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களின் வரிப் பணம் சரியாக பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1107

    0

    0