பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியா அமைவது நிச்சயம் : ஐதராபாத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் குஷ்பு பேச்சு…!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 1:05 pm

தெலுங்கானா : குஜராத்தில் இருந்து வந்திருந்த கலைக்குழுவினருடன் குஷ்புவும் தாண்டியா நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. பா.ஜனதா தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான நடிகை குஷ்பு இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

செயற்குழு நடைபெறும் மண்டபத்தின் வெளியே குஜராத்தில் இருந்து வந்திருந்த கலைக்குழுவினருடன் குஷ்புவும் தாண்டியா நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள கலைத்துறையை சேர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிகளும் கலந்து கொண்டு உற்சாகமாக நடனம் ஆடினார்கள்.

பின்னர் குஷ்பு பேசியதாவது:- பல மாநிலங்களில் மகத்தமான வெற்றி பெற்றுள்ள நிலையில் கூடியிருக்கும் செயற்குழு கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நமது லட்சியம் பிரதமர் மோடி தலைமையில் புதிய, நவீன இந்தியாவை கட்டமைப்பது தான். அந்த லட்சியத்தோடு தான் நாம் அனைவரும் பயணித்து கொண்டிருக்கிறோம்.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!