மனு அளிக்க வந்த பொதுமக்களை வெளியே போ என கடிந்த ஆட்சியர் : வீட்டு விஷேத்திற்கு வரவில்லை என திருப்பி பேசிய மக்கள்.. மீண்டும் சர்ச்சையில் ஆட்சியர்!!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2022, 9:33 pm
கரூர் : போராட்டத்தில் என்ன பெருமை இருக்கு ? கடிந்து விழுந்து வெளியோ போங்கள் என்று கத்திய கரூர் கலெக்டர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை புதிதாக கடந்த மாதம் 26ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு அருகில் அரசுப் பள்ளி, சர்ச் மற்றும் குடியிருப்புகள் மிகுந்த பகுதியாகும்.
குடிமகன்கள் மது அருந்தி விட்டு சாலைகளில் பாட்டிகள்களை உடைப்பது, கடந்து செல்லும் பெண்கள், மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற நடவடிக்கைகளில் மதுப்பிரியர்கள் ஈடுபடுகிறார்கள் என குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் டாஸ்மாக் துறையினையும், மதுவிலக்குத்துறை அமைச்சரின் தொகுதியான கரூர் தொகுதியிலேயே, சர்வதேச போதை ஒழிப்பு தினத்தின் அன்று புதிய டாஸ்மாக் கடை திறந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த வாரம் மனு கொடுத்தும் பயனில்லை.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடையை முழுவதுமாக மூட வலியுறுத்தி நெரூர் என்.எஸ்.கே நகர், ஆர்.சி.தெரு, எம்.ஜி.ஆர் நகர் சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருகை தந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச் சுவர் நுழைவு வாயிலிருந்து கோஷம் எழுப்பியவாறு வந்த பொதுமக்களை நோக்கி வேகமாக சென்ற கரூர் கலெக்டர் பிரபுசங்கர், எதற்காக இங்கே கோஷம் போடுகின்றீர்கள், இதில் என்ன உங்களுக்கு பெருமை இருக்கின்றது என்றும், முதலில் வெளியே போங்கள் என்றும் மனுக்கள் கொடுக்க வந்த மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
அப்போது வழக்கறிஞர் நன்மாறன், நாங்கள் ஒன்னும் கலெக்டர் சார் விஷேசத்திற்கு வரவில்லை, மனுக்கள் கொடுக்க வந்துள்ளோம், எதற்காக, வெளியோ போங்கள், வெளியே போ என்று சொல்கின்றார் என கேட்டு வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நின்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் காவல்துறையினர் சமாதானபடுத்தி, அமைதியாக கோஷங்கள் எழுப்பாத வகையில் கூட்டமாக செல்லாதீர்கள் என்றும் ஒரு சிலர் மட்டும் செல்லுங்கள் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பின்னர் மனுக்களாக அந்த மக்கள் கொடுத்துள்ளனர்.
மேலும், அங்கு காவலில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) நாகராஜன் என்பவரை எதற்கு கோஷம் போட்டப்படி அனுமதித்தீர்கள் என்று எச்சரித்துள்ளார். விருதுகள் மேல், விருதுகள் வாங்கி கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் கலெக்டர், இவர் கரூர் கலெக்டராக சேர்ந்த நாள் முதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) ஒருவரை ஒருமையில் பேசியுள்ளார்.
அதன் பின்னர் கொரோனா பிடியில் இருந்த போது, ஆசிரியர் சமூகத்தினரை கடுமையாக விமர்சித்தார். அதே நிலையில், அன்றே, டிவிட்டரில் கடுமையான வார்த்தைகள் கையாள மாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளித்தலை தொகுதியில், நங்கவரம் பகுதியில் இருந்து மனுக்கள் கொடுக்க வந்த வயதான ஒருவரை வெளியே போயா ? என்றும் கூறிய சொற்கள் வைரலானதையடுத்து இன்றும், அதே கரூர் கலெக்டர் போராட்டம் என்றால் பெருமையா ? என்றும். முதலில் வெளியே போங்க, என்று மனுக்கள் கொடுக்க வந்த மக்களை விரட்டியடித்த சம்பவமும் பெரும் பரப்பரப்பினையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது