கோவையில் இரவுநேரங்களில் அதிகரிக்கும் திருட்டு… ரோந்து பணியை அதிகரிக்க போலீஸாருக்கு வியாபாரிகள் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
5 July 2022, 12:34 pm

கோவை வடவள்ளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், தற்போது அதிகளவில் இரவு நேரங்களில், திருடர்கள் அடுத்தடுத்து கடைகளினெ பூட்டை உடைப்பதால், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனம் சார்பாக, வடவள்ளி காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் வடவள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமயம்பாளையம், கல்வீரம்பாளையம், கணுவாய், போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு குறு வியாபாரிகள் தங்களது தொழிலை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரங்களில் உலா வருகின்ற மர்ம நபர்கள், கடையை நோட்டமிட்டு, கடையின் பூட்டுகளை, உடைத்து உள்ளே சென்று அங்கு இருக்கும் பொருட்களையும் விலை உயர்ந்த செல்போன்களையும், பணத்தையும், எடுத்துச் செல்கின்றனர்,

இந்த நிலையில், கடந்த 3ம் தேதி அதிகாலை 3 மணியளவில் கணுவாய் பகுதியில், உள்ள ஒரு பேன்சி கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த செல்போனை திருடி சென்றுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வடவள்ளி, வியாபாரிகள் சம்மேளனத்தினர் நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணியில், அதிகமாக காவலர்களை ஈடுபடுத்தி சிறுகுறு வியாபாரிகளின் கடையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும் தெரவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்