கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ்.. ரூ.7 லட்சம் பணமும் களவு : சிசிடிவிக்கும் சிக்கல்.. பலே கொள்ளையர்களுக்கு வலை!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 2:19 pm

தெலுங்கானா : நிஜாமாபாத் அருகே கூட்டுறவு வங்கியில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், மெண்டோரா மண்டலம் புசாபூர் கிராமத்தில் உள்ள தெலுங்கானா கிராமிய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் லாக்கரை கேஸ் கட் மூலம் வெட்டி அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

போகும்போது வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்று விட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் .

  • Sai pallavi Ignore Thandel Promotions Event சாய் பல்லவிக்கு திடீர் உடல்நலக்குறைவு : சினிமாவை விட்டு விலக முடிவு!