5 மாவட்டங்களில் எகிறும் கொரோனா… மீண்டும் பதிவான பலி எண்ணிக்கை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 July 2022, 9:30 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,622 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 1,512 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 1060 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 373 பேருக்கும், கோவையில் 137 பேருக்கும், திருவள்ளூரில் 132 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது சிகிச்சையில் 16,765 பேர் உள்ளனர்.