சாப்பிடும்போதும் சாப்பிட்ட பிறகும் மறந்தும்கூட இத பண்ணிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
6 July 2022, 10:26 am

நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம், ஆனால் அதிகபட்ச பலன்களைப் பெற உணவு உட்கொள்ளும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்களும் உள்ளன.

ஏனென்றால், நல்ல உணவுப் பழக்கங்கள் செரிமானம், குடல் ஆரோக்கியம் மற்றும் உடலால் அதிகபட்ச ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்ய உதவுகின்றன. சாப்பிடும் போதும் சாப்பிட்ட பிறகும் செய்யக்கூடாத 5 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

சாப்பிடும் போது:
* நிமிர்ந்து உட்காரவும்.
*உங்கள் ஃபோனை சாப்பிடும் இடத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும்.
*வஜ்ராசனத்தில் அமர்வது செரிமானத்தை அதிகரிக்கும்.
* செரிமானத்திற்கு உதவ உங்கள் உணவோடு புளித்த உணவையும் சாப்பிடுங்கள்.
*உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

சாப்பிட்ட பிறகு
செய்யக்கூடாதவை:
*சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிட வேண்டாம்.
*சாப்பிட்ட உடனேயே காஃபின் கலந்த பானங்களை அருந்தாதீர்கள். ஏனெனில் இது இரும்பு உறிஞ்சுதலை தாமதப்படுத்தும்.
*உணவுடன் தண்ணீர் குடிக்காதீர்கள்.
*உணவு சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்யாதீர்கள் (உடனடியாக நடக்கக் கூட வேண்டாம்).
*ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டாம்.

  • Good Bad Ugly movie latest news “கங்குவா” படத்தால் நடந்த விபரீதம்…அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம் ..!
  • Views: - 866

    0

    0