‘இனி அடையாளத்தோட செய்யுங்க’… க்ரீன் சிக்னல் கொடுத்த நடிகர் விஜய்… அதிரடியாக என்ட்ரி கொடுத்த விஜய் மக்கள் இயக்கம்…!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 7:25 pm

தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்குள் என்ட்ரி ஆவது காலம் காலமாக நடந்து வருகிறது. நடிகர் கமல் அரசியலில் களமிறங்கினாலும் தடுமாறி வருகிறார். அதேபோல, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பல காரணங்களைக் காட்டி, முழுக்கு போட்டு விட்டார்.

மற்றொருபுறம், நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் செய்து வருகிறார். அரசியலுக்கு வருவேனா..? வரமாட்டேனா..? என்பது குறித்து எந்த முடிவும் சொல்லாத நடிகர் விஜய், மறைமுக அரசியல் செய்து வருவதாக என்ற கருத்து எப்போதும் நிலவி வருகிறது. ஆனால், அரசியலில் குதிக்கலாமா..? வேண்டாமா..? என்பது நடிகர் விஜய்யின் குழப்பமாக இருந்து வருகிறது. இப்படியிருக்கையில், அவரது விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட்டு, பல இடங்களை வென்றது.

இது நடிகர் விஜய்க்கு சற்று உத்வேகத்தை அளித்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே, விஜய் மக்கள் இயக்கத்தை எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக அவர் மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது அவரது மறைமுக எண்ணமாக இருந்து வரவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற ரத்ததான செயலி தொடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டதுடன், இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த திடீர் நடவடிக்கைகள் அரசியல் கட்சியினரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?